Advertisment

காட்டுமன்னார்குடியில் சோகனூர் சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மற்றும் சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம்!

CPM struggle in Kattumannargudi against the Sokanoor incident!

காட்டுமன்னார்குடி சுவாமி சகஜானந்தா சிலை அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் அரக்கோணம் அருகே சோகனூரில்இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்கொலை செய்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும்வழங்கிடக்கோரிகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.வட்டக் குழு உறுப்பினர்கள் வெற்றிவீரன், ஜெயக்குமார், கிளைச்செயலாளர்கள் தேசிங்கு, பொன்னம்பலம், பூச்சந்திரன், ராஜேந்திரன், தனபால், செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் சக்திவேல், ராவணன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் வெற்றிகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்ட செயலாளர் முருகவேல் மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

ARAKONAM kattuMannargudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe