CPM party demand government to reduce petrol price

Advertisment

பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கிக் கொண்டுள்ளது. கேஸ் ஆயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டுள்ளது. மோடி, பிரதமராகப் பதவியேற்ற பிறகு பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வு என்பது நாளுக்குநாள் உயர்ந்து கொண்டேவருகிறது. இந்த விலை ஏற்றங்களால் சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்களின் வாடகை, ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துவருகிறது.

இந்த விலை ஏற்றம் குறித்து மத்திய மாநில அரசுகள் மிகுந்த அலட்சியத்துடன் ஆட்சி நடத்தி வருவதாகவும் அதனைக் கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்கள் தீவிரப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் சி.பி.எம். கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் தலைமையில், வழக்கறிஞர் முனியாண்டி முன்னிலையில், 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோன்று அவலூர்பேட்டை நகரச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு தொழிலாளர் சங்கம்ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.