cpm party

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளநடியப்பட்டு, பாலக்கொல்லை, புலியூர், இருளக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் கூழாங்கல் மற்றும் செம்மண்களை வெட்டி கடத்துபவர்களுக்கு துணைபோகும் சுரங்கத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்தும்,கனிம வளங்கள்கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரமான குடிநீரைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டும், கனிம வளங்கள் கொள்ளையடிப்பதற்கு காரணமான அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கைகள்வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.