CPM parties set up graves and staged protests

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மக்கள் அதிகமாக வசித்துவருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் குடியிருப்புக்கு மிக அருகில் கல்லறை தோட்டம் அமையவிருப்பதைத் தடுத்த நிறுத்த வேண்டும்.

Advertisment

ராஜீவ் காந்தி நகரின் பின்புறம் உள்ள விளைநிலத்தைப் பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக, 150 அடிக்கு மேல் தீண்டாமைச் சுவர் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன் சமாதி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.