Advertisment

திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்படுகின்றனர்: அமைச்சர், ஆட்சியர், எஸ்.பி. மீது சிபிஎம் குற்றச்சாட்டு 

CPM

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு 32 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

Advertisment

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில், திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி நவம்பர் 12 அன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி 1 பெண் உள்ளிட்ட 23 பேரை கைது செய்து 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisment

CPM

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி சிறையிலிருந்து 32 நாட்களுக்கு பிறகு வெளியில் வந்த தோழர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியை மயிலாடுதுறை சத்தியம் மஹாலில் அக் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் கீழ்வேளூர் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி தலைமையில் நடைப்பெற்றது. சிறை சென்றவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

CPM

சிறை சென்றவர்களை பாராட்டிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், "அரசு மதுபான கடைக்கு எதிராக போராடிய 23 தோழர்கள் மீதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினர்கள் என வழக்கு பதியாமல் பொய்யான வழக்கை பதிந்துள்ளனர். மாவட்டத்தின் அமைச்சரான ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அனைவரும் இணைந்து திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர்.

CPM

பி.எஸ்.தனுஷ்கோடி, ஜீ.வீரைய்யன், மணலி கந்தசாமி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாற்றை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம், சித்ரவதைகளை அனுபவிக்கும் கூடமாக சிறைகள் இருந்தன. அவற்றையெல்லாம் மாற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறைக்குள்ளேயே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் சிறைகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மீண்டும் எழுச்சியான போராட்டத்தை நிரந்தரமாக மூடும் வரை நடத்துவோம். காவல்துறை பொய்யாக பதிந்துள்ள வழக்கை திரும்பபெற வேண்டும்" என பேசிமுடித்தார்.

அதனை தொடர்ந்து சிறை சென்ற 23 பேருக்கும் பினையில் விடுதலையானது குறித்து தீக்கதிரில் வெளிவந்த செய்தியினை நினைவு சின்னமாக வடிவமைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கினர்.

cpm Mayiladuthurai Nagapattinam protest TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe