Advertisment

பிரபல எழுத்தாளர் சிபிஎம் வேட்பாளராக மதுரையில் போட்டி!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மதுரையில் போட்டியிடுகிறார் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார். முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

su

ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை), திசையெல்லாம் சூரியன் (கவிதை), பாசி வெளிச்சத்தில் (கவிதை), ஆதிப்புதிர் (கவிதை), கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை), மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை), கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (சிறு நாவல்) சமயம் கடந்த தமிழ் (கட்டுரை), காவல் கோட்டம் (புதினம்), அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை), சந்திரஹாசம் (புதினம்), வைகை நதி நாகரிகம், வேள்பாரி (புதினம்) ஆகியவற்றை படைத்திருக்கும் சு.வெங்கடேசனுக்கு காவல்கோட்டம் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். 48வயதாகும் இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ளார்.

Advertisment

su.venkatesan madurai cpm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe