Skip to main content

“காந்தியைக் கொன்றவருக்குக் காந்தி அல்ல பிரச்சனை; மதச்சார்பின்மைதான்..” - சி.பி.எம். க. கனகராஜ்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

CPM Ka. Kanagaraj speech at chidambaram

 

சிதம்பரத்தில் மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் இந்தியா இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜாவித்ஜாபர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

அவர் பேசியதாவது; “காந்தி படுகொலையை ஒரு மனிதப் படுகொலையாக மட்டும் நினைக்கக் கூடாது. இந்தியாவை ஒன்றாக்க வேண்டும் என நாடு முழுவதும் 685-க்கும் மேற்பட்ட சிறுசிறு சமாஸ்தானங்கள் இணைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என நீண்ட நெடிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதில் மதச்சார்பின்மை ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், பொருளாதார சீர்திருத்தம், சமூக நீதியென நான்கு அம்சங்களும் விடுதலை பெற்ற இந்தியாவில் நான்கு தூண்களாக இருக்க வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.

 

வேற்றுமையில் ஒற்றுமை; உணவு, உடை கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காந்தியடிகள் மேற்கத்திய கலாச்சாரம் அண்ட விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் நேரு மேற்கத்திய கலாச்சாரத்தின் படி இருந்தார். அப்படி உள்ளவரை இந்தியாவின் பிரதமராக நேருவை காந்தி வர வேண்டும் என்றார். அதற்கு ஒரே காரணம் அவர் மதச்சார்பின்மை உடன் நடந்து கொண்டது தான்.

 

காந்தியை கொன்றவருக்கு காந்தி அல்ல பிரச்சனை. இந்த மதச்சார்பின்மைதான் பிரச்சனை, இரண்டாவதாகக் கூட்டாட்சியை சிதைப்பதற்காக இந்தியாவில் பொது வெளியை வலது சாரி தத்துவம் ஆக்கிரமித்து விட்டார்கள். இதனைத் தடுப்பதற்கு சுதந்திரப்போரில் அரசியல் அல்லாத இயக்கங்கள் ஒன்று கூடியது போல் ஒரே இயக்கமாக ஒன்று கூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமா? ஒரே நாடாக இருக்க வேண்டுமா? இந்தியாவாகவே இருக்க வேண்டுமா என்பதுதான் மதச்சார்பின்மையை நிரூபிக்கப் போகிறது. காந்தி படுகொலை, ஆர்.எஸ்.எஸ்., சங்க் பரிவார கருத்துக்களை சாதாரண மக்கள் வரை அம்பலப்படுத்த உரையாடுவது அவசியமாகிறது” என்று அவர் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி பேசுகையில், “மதவெறியால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு நாதுராம்கோட்சே தான் தலைமை தாங்கினார் என்பதை நாட்டுமக்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற கருத்தரங்கு மூலம் ஜனநாயக வழியில் செய்து வருகிறோம். கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் காந்தி நினைவு நாளில் உறுதிமொழி எடுத்தபோது கோட்சே பெயரைச் சொல்லக் கூடாது என்று காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது.

 

தமிழக முதல்வர் தமிழகத்தில் கோட்சேவின் கொள்கைகளை அனுமதிக்கமாட்டோம் என்று கருத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறையினர் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார்கள். எனவே  சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி உள்ளிட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.  

 

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் முஷாரப், மனித நேய ஜனநாயக கட்சி துணை பொதுச் செயலாளர் தைமியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.