1956 நவம்பர் 1-ஆம் தேதிதமிழக எல்லைகள் வரையறுக்கப்பட்டு,முழுமைபெற்ற தமிழ்நாடு அமைக்கப்பட்டது. அதன் நினைவாக நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கடைப்பிடிப்பதென்று அரசாணை வெளியானது.
தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர்மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில்விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வாகனப் பேரணியாகவிருதுநகர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சங்கரலிங்கனார்நினைவு மண்டபம் வந்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழை ஆட்சி மொழியாக்கிசட்டம், பொறியியல் உள்ளிட்டஅனைத்திலும் தமிழைக் கொண்டுவர ‘எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்’ என்னும் நிலையை உருவாக்கிட,தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் சிலை முன்பாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதியேற்பு பிரச்சாரம் மேற்கொண்டனர்.