Advertisment

புதிய சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26ல் சி.பி.எம் போராட்டம் அறிவிப்பு!

CPM  farmers bill and labor law   November 26

Advertisment

மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

மார்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நாகைக்கு வந்திருந்தபோது கூறுகையில், "விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. சர்க்கரை ஆலைகள் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடுகின்றனர். ஆனால் ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பதில்லை. தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 1,834 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருக்கிறது. இது அரசு சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தம். இதுவே இவ்வளவு லட்சணம், மோசடி, எமாற்று வேலை. புதிய சட்டத்தின்படி இனி கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போடவேண்டிவரும். விவசாயிகளுக்கான பணத்தை யாரிடம் கேட்பது. ஆகவே, புதிய சட்டங்கள் சிறு குறு விவசாயிகளை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும். பல இடர்பாடுகளைச் சந்திக்கப் போகின்றன.

அதேபோலவே தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 26 தொழிலாளர்கள் நலன் சட்டங்களைச் சுருக்கி தொகுத்து 3 சட்டமாக நிறைவேற்றியுள்ளனர். இந்தச் சட்டத்தால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திடவும்,புதிய சட்டங்களை எதிர்த்தும் நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாவம்பர் 26ஆம் தேதி அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகமுடிவெடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

cpm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe