Advertisment

"விருத்தாசலத்திற்கு கூடுதல் காவல்நிலையம் வேண்டும்" - சி.பி.எம் கோரிக்கை!

CPM demands  additional police station to virudhachalam

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அசோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர்களுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், "விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நகரத்தைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

Advertisment

கடந்த காலங்களில் விருத்தாசலம் பகுதி குறுகிய அளவில் இருந்துள்ளது. அதைக் கணக்கில்கொண்டு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப காவல் நிலையப் பணிகள் அதிகரித்துள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும் விருத்தாசலம் நகரில், மேலும் ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும். சமீபகாலமாக இப்பகுதியில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Advertisment

எனவே, இப்பகுதியில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உடனுக்குடன் சரி செய்யும் அளவிலும் கூடுதல் காவல் நிலையம் அமைக்க வேண்டும்" எனஅசோகன் தெரிவித்துள்ளார்.

cpm Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe