Advertisment

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சி.பி.ஐ.எம் பேரணி..! தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறை (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

குடியுாிமைச் சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமைச் சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பாரிமுனையில் இருந்து கோட்டை நோக்கி அக்கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து பேரணியில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், பாலகிருஷ்ணன் உட்பட பேரணியில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது.

Advertisment

caa rally caa
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe