ADVERTISEMENT

’37 எம்.பி.க்களும் மக்கள் போராளிகள்’-திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன்

10:13 PM Jun 01, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற திருப்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. சுப்பராயன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர் பேசுகையில், ‘’பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி தோல்வி அடையும் என கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்கள் வெளியிட்டன. அதை பொய்யாக்கும் வகையில் மக்கள் 93 ஆயிரத்து 368 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பு படி அவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

தமிழக அரசு கமிஷன் வாங்குவதை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டுள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி பொதுவாழ்வில் கமிஷன் என்பதே கிடையாது. அதன் வழியில் நானும் எனது தொகுதியில் வழங்கப்படும் தொகையை முழுமையாக மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு வழங்குவேன். எனக்கு எதிராக நான் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று வேலை செய்தவர்களுக்கும் எனது தொகுதி மக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கும் பணியாற்ற நான் கடமைப்பட்டு உள்ளேன் எனவே யாராக இருந்தாலும் அவர்கள் கோரிக்கையை என்னிடம் தெரிவிக்கலாம்.

இந்தியாவில் எந்த ஆட்சி வரக்கூடாது என்று நினைத்தோமோ அந்த ஆட்சி மீண்டும் வந்துள்ளது. இந்த ஆட்சி தேச விரோதமாக செயல்படுகிறது. தேச விரோதம் என்பது தேசிய நலனை புறக்கணிப்பது என்பதாகும். நாட்டின் சொத்துக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது இந்தியாவின் சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு போன்ற நடவடிக்கைகள் பா.ஜ.க.மோடி அரசு செய்தது.

மேலும் விவசாய உற்பத்தி துறை வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும் பூதாகரமாக வெடித்துள்ளது. மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் நிலை திவாலாகி விட்டது. விவசாயிகளுக்கு எதிரான 8 வழி சாலை திட்டம் நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் நெல் களஞ்சியமாக உள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். பாஜக கடந்த கால ஆட்சியில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆதால பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மக்களுக்கு திட்டங்கள்,அத்திவாசிய பணிகள் உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

திமுக கூட்டணி தலைமையில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ள 37 எம்.பி.க்களும் மக்கள் போராளிகள். நாங்கள் ஒன்று சேர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியே மக்கள் மன்றத்திலும் போராடுவோம். திருப்பூரில் ஜவுளித்தொழிலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது இதனைப் போக்க தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மூன்றில் இரண்டு பங்கு மானியத்தை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்." என திருப்பூர் சுப்பராயன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT