Skip to main content

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் ஆதரவு

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தபடவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

p

 

திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அவசர கூட்டம் அதன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர்,

"ராசி மணலில் தமிழக அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். காவிரி ஆணையம் இதுவரை கூட்டப்படவில்லை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இதுவரை ஒரு முறை மட்டுமே கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இனி மாதம் தோறும் பெங்களூர் நகரத்தில் கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.குறுவை சாகுபடி செய்ய ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

 

காவிரி டெல்டா மாவட்டல்களில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள மனிதசங்கிலி போராட்டத்திற்கு விவசாயிகள் முழுமையான ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்போம். எந்த அரசியல் கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் அதற்கு ஆதரவு அளித்து பங்கேற்போம்." எனவும் தெரிவித்தார்.

 

பி.ஆர்.பாண்டியன், அனைத்து விவசாயிகள் சங்கம் கட்டுவதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். அந்த கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். சிபிஐயில் இருக்கும் போது கோட்டூர் ஊராட்சி சேர்மனாகவும் இருந்து கட்சி பனியாற்றிவர். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து மோதலால், கட்சியில் இருந்து வெளியேறி, விவசாயிகள் சங்கத்தை கட்டி தமிழகம் முழுவதும் சுற்றிவருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏதாவது போராட்டம் நடத்தினால், அதனையொட்டி ஏதாவது எதிர்மறையாக போராட்டத்தை அறிவித்து, விவசாயிகளின், பத்திரிக்கைகளின்  கவனத்தை திசை திருப்புவார்.

 

இந்த நிலமையில் இந்திய கம்யூனிஸ் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் நடத்த உள்ளது. அதற்கு தனது ஆதரவை பி,ஆர்,பாண்டியன் ஆதரவு தந்திருப்பது நிறைவாக இருக்கிறது." என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காவிரி நீர் எங்கே...? மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்ட பி.ஆர்.பாண்டியன் குண்டுக்கட்டாக கைது

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

'Where is Cauvery water...? BR Pandian who shouted slogans condemning the central and state government was arrested

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். 'கர்நாடக அரசிடம் இருந்து நீரை பெற்றுத்தராத மத்திய அரசையும், வேடிக்கை பார்க்கும் மாநில அரசையும் கண்டிக்கிறேன்' என கோஷமிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் பி.ஆர்.பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியனும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகியும் தொடர்ந்து குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணை கட்டுமானத்தில் ஈடுபட்ட மறைந்த டி.ஐ.ஜி.யின் குடும்பம் - பி.ஆர்.பாண்டியன்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

B.R. Pandian condoles the demise of DIG Vijayakumar

 

“தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை டிஐஜி விஜயகுமார் அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

கோவை டிஐஜி விஜயகுமார் இறப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறையில் கோவை சரக டிஐஜியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் துணிவோடும் செயல்படும் பண்புமிக்கவர். விளம்பரம் இல்லாமல் தன்னடக்கத்துடன் அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் பணிவுடன் பழகும் உயர்ந்த மனம் கொண்டவர்.

 

தேனி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார். தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளுக்காக நான் தேனி பகுதி சென்று திரும்பும்போதெல்லாம் பிரச்சனைகள் குறித்து என்னோடு தொலைபேசியில் விவாதிப்பார். தான் பிறந்த மண்ணின் மீதும் முல்லைப் பெரியாறு அணை மீதும் அளவற்ற மோகம் கொண்டவர். 

 

இரண்டு முறை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி என்கிற புகழை அனைவரிடத்திலும் பெற்றவர். இவரது மறைவு காவல் துறையில்  பேரிழப்பாகும். அதுமட்டுமின்றி காவல்துறையில் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அடிமட்ட காவலர்கள் துவங்கி உயர்மட்ட அதிகாரிகள் வரையிலும் தொடர்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு இவரது மரணம் வழிகாட்டுதலாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.