C.P. Radhakrishnan  One nation, one election  imperative of time  progress of the country

‘ஒரே நாடு ஓரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம், ஜனநாயகம்தழைத்தோங்கவும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு மேலும்முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Advertisment

ஈரோடு மாவட்டம் வேலப்பம்பாளையத்தில் வேதபாடசாலை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரைவழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடைய ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம், ஜனநாயகம்தழைத்தோங்கவும்முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு மேலும் முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும்.

Advertisment

தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கேட்கிற இந்த ஆளுநர் போன்று இதுவரை தமிழகத்திற்கு ஆளுநர் கிடைக்கவில்லை. நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என திமுக விரும்பினால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர, ஆளுநர் மீது குறை சொல்லக்கூடாது. தமிழக அரசு எந்த மசோதாவை வேண்டுமானாலும் அனுப்பினால் ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாதனத்திற்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே ஆளுநர் ஒப்புதல் தருவார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயருக்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு ஆதரவும் உள்ளது. மேலும் நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். வைகோ இது வரை எந்த நல்ல திட்டத்தைப் பற்றியும் குறை சொல்லாமல் இருந்ததில்லை” என்றார்.