Advertisment

ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் சுமார் 5 கோடி வரை மாடுகள் விற்பனை! - விவசாயிகள் மகிழ்ச்சி!!

jkl

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையானது தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையாகும். இந்த சந்தைக்கு வாரம்தோறும் திங்கள் கிழமையன்று கரூர், காங்கேயம், தேனி, பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க அதிகளவில் கேரளா மற்றும் ஆந்திரா வியாபாரிகளும், உள்ளூர் விவசாயிகளும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரங்களில் மாடுகளுக்கு ஏற்பட்ட கானை நோய் காரணமாக மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. அதே போல் மாடுகளை வாங்கவும் வியாபாரிகளோ, விவசாயிகளோ ஆர்வம் காட்டாததால் கடந்த மூன்று வாரங்களாக மாட்டுச் சந்தை வெறிச்சோடியே காணப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு சுமார் 7 ஆயிறத்துக்கும் மேற்பட்ட காங்கேயம் காளை, நாட்டு மாடு, சிந்து மாடு, எருது, ஜல்லிக்கட்டு காளை என அனைத்து வகையான மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மாட்டுச்சந்தை களைகட்டியது. இதன்காரணமாக சுமார் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த மாட்டுச்சந்தையில் கரோனா பாதிப்பு அச்சமில்லாமல் இருப்பதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

cows
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe