Advertisment

மருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம் தாலுகா,ஆட்டாங்குடி ஊராட்சி, குன்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி , கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், குணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலையரசி மற்றும் பஞ்சு ஆகியோரின் வீடுகளில் உள்ள பசு மாடுகள் புதன்கிழமை காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றன.

Advertisment

cows died in drinking poisoned water

இந்நிலையில் குணங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர் தனது வயலில் பயிரிட்டிருந்த பருத்தி செடிகளில் பூச்சி தாக்காமல் இருக்க தண்ணீரில் மருந்துகள் தெளிப்பதற்கு ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி மருந்தை கலந்து வைத்து உள்ளார்.

Advertisment

மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மருந்து கலந்த தண்ணீரை எதிர்பாராதவிதமாக குடித்துவிட , சம்பவ இடத்திலேயே 4 பசுமாடுகள் துடிதுடித்து இறந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருப்பாலைக்குடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

cows death
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe