COWIN APP TAMIL LANGUAGE UNION GOVERNMENT

Advertisment

'கோவின்' (CoWIN) இணையதளத்தில் தமிழ் மொழி அல்லாமல் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை அடுத்து மத்திய அரசிடம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒன்றிய அரசின் 'கோவின்' இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள போது தமிழ் வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார்.

அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தக்கட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.