நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி உத்தரவு படி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைத்து மாவட்டங்களிலும் யாகம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்ட நிலையில் , இன்று அனைத்து மாவட்ட கோயில்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு யாகங்கள் மழை வேண்டி நடத்தி வருகின்றனர்.

Advertisment

admk

இதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. இதில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கோ பூஜை நடைபெற்றது. கோ பூஜையின் போது மந்திரங்கள் முழங்கி பூஜை செய்த போது, பசு மாடு திடிரென மிரண்டு உதைத்தது. இதனால் சுற்றி இருந்தவர்கள் அலறியடித்து சிதறி ஓடினர். இதில் விக்னேஷ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.