Advertisment
தமிழகத்தில் பிரபலமான மாட்டுச் சந்தைகளில் ஈரோடு மாட்டுச் சந்தையும் ஒன்று. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஈரோட்டில் நடக்கிறது. இன்று கூடிய மாட்டுச் சந்தையில் கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகளும் மேலும் தமிழகத்தின் பல மாவட்டத்திலிருந்தும் வந்திருந்தனர். ஐந்து கோடி ரூபாய்க்கு மாட்டு வியாபாரம் நடைபெற்றது.