Cow cart ride of educated brides ...!

Advertisment

வசதி படைத்தவர்களின் இல்லத் திருமணம் என்றாலே ஆடம்பரமாய், விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனம் மேலும் பல வகை உணவு வகைகள் எனப் பல லட்சக்கணக்கில் செலவு செய்துதான் பெரும்பாலான திருமணங்களை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் கூட வீடுகளில் திருமணம் நடைபெற்று பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இப்போது கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல திருமணங்கள், வீடுகளில் நடைபெற்று வருகிறது. அதிலும் திருமணம் என்றால் ஆடம்பரம் மட்டுமல்ல 'ஃபோட்டோ சூட்' என்ற பெயரில் நடிகர் நடிகை போல மணமக்களைபோஸ்கொடுக்கவைப்பது,மணமேடையில் குத்தாட்டம் போடுவதுஎனபுதுமை என்ற பெயரில் மாற்றிவிட்டனர்.

 Cow cart ride of educated brides ...!

நாகரீகம் என்ற முறையில், பலபுதுமைகளைக் கொண்டு வந்து திருமணச்சடங்கு என்ற பழமையை வேரோடு அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 27 -ஆம்தேதி தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற மணமகன் கௌதமன், மணமகள் சௌந்தர்யா ஆகியோர் திருமணத்தில் பழமையை நினைவு கூறும் விதமாகவும், பாரம்பரித்தை மீட்டெக்கும் முயற்சியாகவும், திருமண மண்டபத்திலிருந்து மணமகன் வீடு உள்ள வெள்ளாளபாளையம் என்ற கிராம் வரை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.

Advertisment

விவசாயக் குடும்பங்களிலிருந்து வரும் புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டிப்பயணம் மேற்கொள்வது வழக்கமானது என்றாலும், இந்த மணமக்கள் இருவரும் முதுகலை பட்டயப்படிப்பு முடித்து நகரப் பகுதியில் வேலை பார்த்து நாகரீகத்துடன் வாழ்ந்துவருபவர்கள். அந்தக் காலத்தில் இவர்களது பெற்றோர்கள், திருமணத்தின் போது மாட்டு வண்டியை மட்டுமே போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வந்ததை அறிந்து, அவர்களது பிள்ளைகளான மணமக்களும் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு, பழைமையை வெளிப்படுத்தி சிறப்பு சேர்த்தனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை வழியில் உள்ள கிராம மக்களும், நகர்ப் பகுதி மக்களும் வியப்புடன் பார்த்ததுடன், ஒரு சிலர் மணமக்கள் மாட்டுவண்டியை நிறுத்தி அவர்களோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

 Cow cart ride of educated brides ...!

மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்ட தம்பதிகள் இதுகுறித்துகூறுகையில் "எங்களது இரு குடும்பங்களும் விவசாயம் சார்ந்த குடும்பங்கள் என்பதால், வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நினைவு கூறவேண்டும் என்ற எண்ணத்திலும் நல்ல நோக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும்இந்த மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்டோம். எங்களின் திருமணத்தில் புது அனுபவம் ஏற்பட்டதை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது" என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

Advertisment

இந்தத் திருணமத்தில் மணமகனுக்குப் பெண் வீட்டார் சீதனமாக ரூபாய் 30 லட்சம் மதிப்பில் புதிய சொகுசு கார் வழங்கியிருந்த நிலையிலும் மணமகள் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளவே விரும்பம் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.