/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1408.jpg)
விழுப்புரம் நகரத்தை ஒட்டி செல்லும் எல்லீஸ் சத்திரம் சாலையை ஒட்டி உள்ளது வழுதரெட்டி ஏரி. இந்த ஏரி பகுதிக்கு நேற்று காலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர்கள் திடுக்கிட்டனர். காரணம் ஏரிக்குள் 10க்கும் மேற்பட்ட பசுமாடுகள், 4க்கும் மேற்பட்ட கன்றுக் குட்டிகள் இறந்து கிடந்துள்ளன.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கமலநாதன் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் வரை ஏரிப் பகுதியில் மாடுகள் இறந்து கிடந்ததாகத்தெரியவில்லை. தற்போது மாடுகள் இறந்துள்ளது. வேறு எங்காவது இறந்த போன மாடுகளை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றார்களா? ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கன்றுகள் இறந்ததது எப்படி என்பது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)