வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியில் சோட்டா பாய் என்பவருக்கு சொந்தமாக 3 பசுமாடுகள் உள்ளன. அதனை தனது வீட்டிலேயே வைத்து வளர்த்துஅந்த பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பாலை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் சோட்டா பாய்.

cow attacked by blade;police investigation

Advertisment

ஆகஸ்ட் 5ந் தேதி வீட்டுக்கு வெளியே பட்டியில் மாடுகளை கட்டிவைத்துவிட்டு உறங்கியுள்ளார். விடியற்காலை நேரத்தில் மாடுகள் கத்தியுள்ளது.அதன் கதறல் அலறலாக தெரிய வெளியே வந்து பார்த்துள்ளார் சோட்டா பாய். அப்போதுபசுமாடுகளின் உடலில் கத்தியால் அங்கங்கு கிழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisment

இதனைப்பார்த்து அதிர்ச்சியாகி கண்ணீர் விட்ட அவர்விடிந்ததும் இதுதொடர்பாக ஆம்பூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். போலிஸார் வந்து மாடுகளை பார்த்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

cow attacked by blade;police investigation

மாடுகளின்உடல்களில் காயங்கள் அதிகமாக இருந்ததால் சோட்டாபாய் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு மாட்டை ஓட்டிச்சென்று சிகிச்சை அளிக்க வைத்து மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். எதற்காக இந்த மாடுகளின் உடல்களில் இப்படி கத்தியை வைத்து கிழித்துள்ளார்கள், சோட்டாபாய்க்கும் வேறு யாருக்குமாவது முன் விரோதம் இருந்து இப்படி செய்தார்களா? அல்லது வேறு யாராவது பிரச்சனையை உருவாக்க இப்படி செய்தார்களா என்ன காரணம் என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர் போலீசார்.

.