/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art police siren_27.jpg)
சுற்றுலா சென்ற பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த இளைஞர்களைபோலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த விக்டர் ராஜ் மனைவிசரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். அப்போதுசரண்யா மற்றும் அவரது குடும்பத்து பெண்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, அங்கு வந்த எலமனுர் அண்ணாநகரை சேர்ந்த ரா.சங்கிலி (என்கிற) தேவா (வயது 19), க.முனீஸ்வரன் (வயது 19), கோ.வினீத் (வயது 19) ஆகிய மூவரும் சேர்ந்து அவர்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர்.
இதை தட்டிக்கேட்ட சரண்யாவைஅடித்து உதைத்து பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டதுடன், தகராறு செய்த இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஜீயபுரம் போலீசார் மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
Follow Us