/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dig_0.jpg)
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக விஜயகுமார் என்பவர் கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டிஐஜி விஜயகுமார்2009 குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)