covai private college student marriage not interested incident 

கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரதுமகள் ஸ்ரீவர்ஷா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கில பாடப் பிரிவில்இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரின்பெற்றோர் இவருக்கு திருமணஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் அதில் விருப்பம் இல்லாத ஸ்ரீவர்ஷா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

Advertisment

வழக்கம்போல் நேற்று கல்லூரிக்கு வந்த ஸ்ரீவர்ஷா வகுப்பறையில் இருந்தபோது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தசக மாணவிகள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல்தந்தனர். இதையடுத்துகல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில்சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி விஷமருந்தி உள்ளதாகத்தெரிவித்தனர். தொடர்ந்துஅவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாணவிக்கு அவரதுபெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் அதில் விருப்பம் இல்லாததால், வகுப்பறையில் மறைத்துவைத்திருந்த விஷத்தை குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாகத்தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.