covai police dig vijayakumar incident

Advertisment

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவிஜயகுமார் இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் என தகவல்வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்வெளியாகியுள்ளது. அவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் ரத்தினம் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்துதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இ.கா.ப., இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனதனது இரங்கலைத்தெரிவித்துள்ளார்.