covai car incident police secretly watch two hundred peoples 

Advertisment

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்தகார்வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்தசம்பவத்தைத்தொடர்ந்து கோவை மாநகரபோலீசார்சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்ஐ.எஸ். ஆதரவு மனநிலையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் தொடர்செயல்பாட்டைகண்காணிக்கத்தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக கோவையில் 200 பேர் தொடர்ந்துபோலீசாரால்கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த தொடர் கண்காணிப்புகுறித்துகாவல்துறை சார்பில் தெரிவிக்கையில், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்குபிறகு கோவையில்கண்காணிப்பைதீவிரப்படுத்தி உள்ளோம். அதிலும் குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்கள்குறித்துதொடர்ந்து கண்காணித்து வந்தோம். அதில் ஐ.எஸ். கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர்கள் என 200 பேரைக் கண்டறிந்துள்ளோம்.

Advertisment

இவர்களில் படிக்காதவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என பல்வேறு தரப்பினரும் உள்ளனர். இந்த கண்காணிப்பு மூலம் அவர்களின் அன்றாட செயல்பாடுகள், செல்போன்அழைப்புகள், தினசரி சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறுவிவரங்களும்கண்காணித்துபதிவு செய்யப்பட உள்ளன. அதுமட்டுமின்றி சமூகவலைதளங்களில்சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் பதிவிடுதல், சர்ச்சைக்குரிய தகவல்கள் பரிமாறப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.