
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து,அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் எனநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை,நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்கள், சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை ஆகியவைகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் (12.10.2020) முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில்,இந்த வழக்கில் இன்று (16.02.2021) காலை, ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும் எனநீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.
Follow Us