மாநிலங்களவை எம்பிக்களாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்வில்சன், சண்முகம் ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல் அதிமுகவில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு மனுதாக்கல் செய்தமுன்னாள் அமைச்சர்முகமது ஜான், மேட்டூர் அதிமுகநகர செயலர் என்.சந்திரகேகரன் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமாவிற்கு ஒதுக்கப்பட்ட எம்பி சீட்டில் மனுதாக்கல் செய்த அன்புமணியும்தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் தேர்வுபெற்றதற்கான சான்றிதழைசென்னை தலைமைசெயலகத்தில்பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ மற்றும் திமுக மாநிலங்களவை எம்பிக்களான வில்சன், சண்முகம் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதையைசெலுத்தினர். அதேபோல்பெரியார் நினைவகத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.