mn

சிலைக்கடத்தல் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் சாதாரணமாக எடுத்து கொள்ளாது என நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகமாகி வருவதால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவின் படி சிலை கடத்தல், சிலை பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய பொருட்கள் மீட்பு போன்ற வழக்குகளை விசாரிக்க கடந்த வாரம் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

Advertisment

இந்த சிறப்பு அமர்வின் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் நேற்று முதல் விசாரணையை துவங்கியுள்ளனர். இதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது மற்றும் புராதான பொருட்கள் திருட்டு போனது தொடர்பாக வழக்கை முதலில் விசாரித்தனர்.

இந்த வழக்கின் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஸ்ரீரங்கம் கோவிலின் சிலை சேதம் மற்றும் திருட்டு தொடர்பாக ஆதாரங்களை சீலிட்ட கவரில் நீதிபதியிடம் வழங்கினார். இது தொடர்பாக அரசு தரப்பு, இந்து அறநிலைய துறை உள்ளிட்டோர் வாதங்கள் நடத்த வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

அப்போது, தனக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் பாதுக்காப்பு வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

இதை கேட்ட நீதிபதி மகாதேவன், சிலை கடத்தல் வழக்குகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.சிலைக் கடத்தல் தொடர்பான எந்த புகார் இருந்தாலும் உடனடியாக தனக்கு தெரியப்படுத்தினால் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுப்பேன் .

சிலைக்கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரனையை வைத்து மட்டுமே நீதிமன்றம் முடிவெடுக்காது என கூறிய நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.