Skip to main content

“ஆஜராகாவிட்டால் குற்றச்சாட்டு பதியப்படும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Published on 06/05/2025 | Edited on 06/05/2025

 

Court warns Minister M. Subramanian If didnt appear, charges will be filed

தமிழ்நாட்டில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் மா.சுப்பிரமணியன். அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மே 13ஆம் தேதியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர் மீது குற்றச்சாட்டு பதியப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 
 

சார்ந்த செய்திகள்