
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைஅடுத்த தக்கோலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் 41 வயதான கனகராஜ். பாலாற்றில் மணல் கடத்தும் கும்பலைப் பிடிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு இரவு ரோந்து சென்றார். கள்ளரி கிராமத்தில் ஆற்றில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக மணல் கடத்திய 24 வயதான சுரேஷ் என்பவன் ஓட்டி வந்த டிராக்டரை மடக்கிப் பிடித்தார்.
டிராக்டரை மடக்கிய தலைமைக் காவலர் கனகராஜ் மீது மணல் வண்டியை ஏற்றி கொலை செய்தார் சுரேஷ்.இந்த வழக்கில் சுரேஷ் என்ற கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)