
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் தியாகபெருமாள்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். மின் பணியாளராக இருந்த சதீஷ் சிதம்பரம் அடுத்த சிவபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியை காதலிப்பதாகத் தெரிவித்த சதீஷ் திருமணம் செய்வதாக ஏமாற்றி அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சதீஷ் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்றது. தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி உத்தமராஜா சதீஷ்க்கு 32 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.