Advertisment

'இரட்டை மரண தண்டனை...'- ஏம்பல் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

pudukottai

ஏம்பல் கிராமத்தில் சிறுமியைப்பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை கொடுத்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், கடந்த ஜூன் மாதம்30 ஆம்தேதிமாலை, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்,காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அதே ஊரில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த கிழவிதம்மம் ஊரணியில், காட்டாமணக்குச் செடிகள் நிறைந்த புதரில், சடலமாகக் கிடப்பதாகத் தகவல் வெளியானது.

Advertisment

court sentence in puudkottai case

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றியபோது, உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சிறுமியின் உடல்.விசாரணையில் ஏம்பல் பேருந்து நிலையம் அருகே, பூக்கடை நடத்திவரும் மாரிமுத்து மகன் சாமுவேல் (எ) ராஜா (பல கோயில்களில் பூசாரியாக உள்ளவர்) சம்மந்தப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்ற தகவல் கிடைத்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணைசெய்தனர். 'தான் ஒருவனே சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்ததாக'விசாரணையில் கூறினான்.

இதனையடுத்து இதுதொடர்பான வழக்கை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது. சம்பவம் நடந்து 6 மாதத்திற்கு மேலான நிலையில், 24 சாட்சியங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது குற்றவாளியானசாமுவேல் (எ) ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

sentenced Sexual Abuse Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe