ADVERTISEMENT

பொன்மாணிக்கவேல் சிறப்பு நியமனத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!!

06:28 PM Dec 13, 2018 | kalaimohan

ADVERTISEMENT

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடந்த விசாரணையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலே வழக்குகளை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்று கூறி மேலும் ஒரு வருடத்திற்கு பொன்மாணிக்கவேலை சிலைகடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரியாகவும் உயர்நீதிமன்றம் நியமித்திருந்தது,

ADVERTISEMENT

அதனை அடுத்து சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு பதவி நீட்டிப்பு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு சார்பில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், நாகேஸ்வரராவ் ஆகியோருடைய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கபட்டதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT