ADVERTISEMENT

அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல், வேல் யாத்திரை ஏன்? - நீதிமன்றம் கேள்வி! 

04:25 PM Nov 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.கவின் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது எனத் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை அனுமதிக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி, பா.ஜ.கவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில், ஓசூரில் பா.ஜ.க யாத்திரைக்கு அரசு அனுமதிக்காத நிலையில் அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் வேல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என பா.ஜ.க தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஓசூரில் பா.ஜ.க மேற்கொள்ளவிருந்த வேல் யாத்திரை விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி தரப்பு தெரிவித்துள்ளது. இது கோயில் யாத்திரை போல தெரியவில்லை. அரசியல் யாத்திரை போலத் தெரிகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என டி.ஜி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யாத்திரை மேற்கொண்டால் என்ன அர்த்தம் அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? 'வேல்', ஆயுதச் சட்டப்படி தடை செய்யப்பட்டது எனக் கூறிய உயர்நீதிமன்றம், பா.ஜ.கவின் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது எனத் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து, டிசம்பர் 2ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT