style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவை திறப்புவிழா இன்றி திறந்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் இன்று நடந்த விசாரணையில், எம்ஜிஆரின் புகழை பறைசாற்ற நினைவு வளைவைதவிர தமிழக அரசு என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம்எம்ஜிஆரின் கொள்கை மற்றும் கருத்துக்களை பரப்ப தமிழக அரசு என்ன செய்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியது.
வரும் ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு வளைவை திறக்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில் எந்தவொரு திறப்பு விழாவுமின்றி நினைவு வளைவை திறக்க அனுமதியளித்துள்ளது உயர்நீதிமன்றம்.