Court orders Vanitha Vijayakumar and Peter Paul to appear!

நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம், பீட்டர்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில்,வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல, காவல் ஆணையரிடமும் புகார் அளித்தார்.

Advertisment

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ஹெலன், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

அதில், கணவர் பீட்டர் பால், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கும், ஆதாரங்களும் முகாந்திரமும் இருப்பதாகக் கூறி, வழக்குத் தொடர்பாக, டிசம்பர் 23-ஆம் தேதி ஆஜராகும்படி, வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர்பாலுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment