Court orders hearing complaint against Waqf board head

வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக வக்பு வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான அஜ்மல்கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், வாரியத்தலைவர் அப்துல் ரஹ்மான் தன்னுடைய காரில் நீல நிற சுழல் விளக்கும், தேசியக் கொடியும் பயன்படுத்தி வருகிறார். இது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என்றும் தன்னுடைய மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisment

தமிழக அரசு ஏற்கனவே ஒரு சட்ட விதி முறையைப் பின்பற்றி வருகிறது. அதிகாரிகளில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் தான் சிவப்பு நிற சுழல் விளக்கைப் பயன்படுத்த முடியும், அரசியல்வாதிகள் யாரும் பயன்படுத்த கூடாது என்று விதிமுறை உள்ளதால், எந்த அமைச்சரின் வாகனங்களிலும் இதுபோன்ற சுழல் விளக்கு இல்லாத போது வாரிய தலைவருக்கு எதற்கு நீல நிற சுழல் விளக்கு மற்றும் தேசியக் கொடி. முதலில் நான் காவல்துறை தலைவரிடம் அணுகியபோது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

எனவே தற்போது நீதிமன்றத்தை நாடியதற்கான காரணம் கடந்த ஆண்டு தமிழக டிஜிபியிடம் இது குறித்து நேரில் சென்று மனு அளித்தேன். ஆனால் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் காவல் நிலையத்தில் அல்லது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்று அரசாணை பெறப்பட்டது.

அதன்பின் சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் ஜார்ஜ் டவுன் -7ல் அணுகியபோது அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவைத் திருப்பி அனுப்பியது. எனவே ஜார்ஜ் டவுன்- 7ல் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி இருதரப்பு வாதங்களையும் கேட்டு சென்னை வடக்கு காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி, மனுதாரர் குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக அதற்குரிய முகாந்திரம் இருந்தால் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.