ரயில் மற்றும் ரயில்வே பகுதிகளில் பேனர் கட்-அவுட் வைக்க தடை- நீதிமன்றம் உத்தரவு 

தென்னக ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளில் மற்றும் ரயில்களில் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள், கட்-அவுட்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

banner

மதுரையை சேர்ந்த பிரபாகர் உயர்நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ரயில் நிலையங்களில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் போன்றவற்றால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க மற்றும் சுவர் விளம்பரங்களை செய்ய இடைக்கால தடைவிதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தென்னக சொந்தமான இடங்களில் எவ்விதமான பிளக்ஸ், பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து, தமிழக அரசு பொது இடங்களில் பிள்க்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் போன்றவை பொதுமக்களின் பயணத்திற்காகவே தவிர சங்கடங்களை உருவாக்குவதற்கு அல்ல.

தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ அதன் நிர்வாகிகளோ இந்த உத்தரவுகளை மீறினால், அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை தென்னக ரயில்வே 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

banners madurai hi court order
இதையும் படியுங்கள்
Subscribe