Advertisment

நித்தியானந்தா வழக்கில் திடீர் திருப்பம்... இந்த இடத்தில் தான் உள்ளார்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

நித்யானந்தா கடத்திச் சென்றதாக கூறப்படும் பெண்கள் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.

Advertisment

nithy

அவரது மனுவில் ,நித்தியானந்தா தனது 2 மகள்களை சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரி ஆட்கொணர்வு மனுவை அகமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் ஜனார்த்தன சர்மா. நித்யானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா தனது மகளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தொடுத்த வழக்கின் விசாரணை, குஜராத் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா ஆகிய இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். இந்த மனுவை விசாரித்த, அகமதாபாத் உயர்நீதிமன்றம்,ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் தங்கி இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அப்போது மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டில் இருந்து வாக்குமூலமும் தாக்கல் செய்தனர். இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் தங்களது தந்தை ஜனார்த்தன சர்மாவால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். தாங்கள் தற்போது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உறுதியளித்தனர். மேலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அகமதாபாத் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி நடந்த விசாரணையின் போது, அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்த சகோதரிகள், தற்போது மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் இருந்து வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நித்தியானந்தா மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

complaint issues nithiyanantha police woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe