Advertisment

ஓ.பி.எஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த சகோதரரான ஓ.ராஜா மீது வழக்கு பதிவுசெய்ய பெரியகுளம் வடகரை காவல்நிலையத்துக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சியின் நகர பொதுச்செயலாளர் துரை நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். இவர், பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்துவந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 2018 அக்டோபர் 21-ம் தேதி மர்ம நபர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

Advertisment

Court order to file case against OPS brother Raja

அவரைத் தாக்கியது ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் ஆட்கள் எனக் கூறப்பட்டது. படுகாயத்துடன் துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மதுரை மன்டல ஆவின் தலைவர் ஓ.ராஜா மற்றும் மணல் மாபியாக்களான நாய் சேகர், குண்டாஸ் சுரேஷ், கள்ளிப்பட்டி சசி போன்றவர்கள் மீது பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் துரையின் தம்பி புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவு செய்யாமல், புகார் மனுவுக்கான ரசீது மட்டும் போட்டு அனுப்பிவிட்டனர்.

அதிலும் ஓ.ராஜாவின் பெயர் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த துரை, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி மற்றும் மாவட்டக் காவல்கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். இருந்தும் எந்தப் பலனும் இல்லை! இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் ரேசன் பொருட்களை கடத்தல் சம்மந்தமாக புகாரில் ஒ.ராஜா துரையை தொலைபேசியில் மிரட்டிய தொலைபேசி ஆடியோ வெளியாகிமாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Court order to file case against OPS brother Raja

இதுசம்மந்தமாக பல உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அதிகாரிகள் அணைவரும் கண்டுகொள்ளாததால் துரை நீதிமன்றத்தை நாடினார். வழக்கானது பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், கடந்த ஜுன் 4-ம் தேதி, ஓ.ராஜா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் நகலை நேற்றுநீதிமன்றத்தில் இருந்து பெற்ற துரையை இது தொடர்பாகத் தொடர்புகொண்டு பேசினோம்.

"இந்தத் தீர்ப்பு நேர்மைக்கும் நியாயத்துக்கும் கிடைத்த வெற்றி. இரண்டு மாதத்துக்குள் ஓ.ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை நேர்மையாக நடக்கும் என எதிர்பார்கிறேன்" என்றார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது தேனி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

case admk raja ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe