Advertisment

2 ரூபாய் செலவில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து!!! நீதிமன்றம் போட்ட உத்தரவு...

Court order for Corona to take preventive treatment at a cost of 2 rupees

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்துள்ளது.

Advertisment

கடந்த 12 நாட்களாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால்இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டோரில்1,837 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநில மற்றும் பிற நாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும்தெரியவந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் கரோனாவிற்கு 2 ரூபாய் செலவில்தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து உள்ளதாகவும், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில், 2 ரூபாய் செலவில் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக மருத்துவர் தொடர்ந்துள்ள மனுவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதற்கு பதில் அளித்துள்ளது.

highcourt medicine corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe