Advertisment

மத ஐதீகத்தில் நீதிமன்றம் பார்த்து முடிவெடுத்திருக்க வேண்டும் -ரஜினிகாந்த்!

 The court must have decided in religious fidelity -Rajinikant!

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தநடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Advertisment

பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்க ஆயத்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதே என்றகேள்விக்கு பதிலளிக்கையில்,

Advertisment

அப்படியெல்லாம் இல்லை ஆனால்கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதற்கான காலம் நேரம் பார்த்து ஆரம்பிப்பேன்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு

பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம உரிமை வேண்டும் என்பது நல்லது. ஆனால் அது ஒரு கோவில் ஒவ்வொன்றிக்கும் ஒரு சடங்கு இருக்கும், காலம் காலமாக ஐதீகம் என்று ஒன்று இருக்கும் எனவே அதில் வேறொருவர் தலையிடக்கூடாது என்பது எனது கருத்து.உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் ஆனால் மதம் சார்ந்த விசயங்களில் கொஞ்சம் பார்த்து பண்ணவேண்டும்.

மீடூ விவகாரம் பற்றிய கேள்விக்கு,

இது பெண்களுக்கு சாதகமான மூவ்மெண்ட், பெண்கள்மிஸ் யூஸ் பண்ணகூடாது எனக்கூறினார்.

வைரமுத்து அப்படி ஒன்று நடக்கவே இல்லை அதற்கு ஆதாரம் இருக்கிறதாகவும் கூறிமறுத்துள்ளார். உண்மையிருந்தால் வழக்கு தொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்எனக்கூறினார்.

பேட்டடயலாக் ஒன்று சொல்லும்படி செய்தியாளர் கேட்டதற்கு,

பேட்டபராக் எனக்கூறி நகர்ந்தார்.

rajini makkal mandram rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe