Advertisment

குடும்பத் தகராறில் தந்தை கொலை; மகனுக்கு ஆயுள்தண்டனை

court judgement the son to life imprisonment case of the death of the father

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் எ.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராம்(30). இவரது தந்தை ராஜாராம். குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை ராஜாராம் மற்றும் தாய் வெள்ளையம்மாள் ஆகியோரை கடந்த 20. 12. 2020 அன்று அருவாமனையில் வெட்டியதில் தந்தை ராஜாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை முடித்து விஜயராம் மீது இறுதி அறிக்கை தாக்கல் நீதிமன்றத்தில் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

Advertisment

இந்நிலையில் நேற்று(10.4.2023) விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இந்த வழக்கின் இறுதி தீர்ப்பினைவழங்கினார். இந்த வழக்கில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் விஜயராம் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலை முயற்சிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளைத்தெரிவித்தார்.

Advertisment

father kallakurichi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe