Court issues dramatic verdict in assault on elderly woman

கோவையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம்கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் தன்னுடைய தோட்டத்தில் வேலைக்கு வந்திருந்த மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையியல் வேலுச்சாமி கைது செய்யப்பட்டு இந்த வழக்கானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் விசாரணை முடிந்து இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வேலுச்சாமிக்கு ஒரு தண்டனையுடன் 16 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.