கள்ளகாதல் தவறில்லை என நீதிமன்றமே கூறியுள்ளதாக கணவன் மனைவியிடம் வாக்குவாதம் நடத்தியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

publive-image

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்ஜான்பால் பிராங்க்ளின்-புஷ்பலதா தம்பதியினர். ஜான்பால் அதேபகுதியிலுள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு புஷ்பலதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜான்பால் தற்போது தான் பணிசெய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். இந்த விஷயம் மனைவி புஷ்பாவுக்கு தெரியவர இருவருக்கும்அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதேபோல் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியதற்காக மீண்டும் இருவருக்கு இடையே சண்டை முற்றியது. அப்போது நீதிமன்றமே கள்ளக்காதல் தவறில்லை என கூறியுள்ளதாகமனைவியுடன் ஜான்பால் வாக்குவாதம் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த புஷ்பலதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment