முன்னாள்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார் நளினி. இவரது கணவர் முருகனும் அதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நளினி தனது மகள் அரித்திரா திருமணத்துக்காக 6 மாத பரோல் கேட்டு சில மாதங்களுக்கு முன்பு தமிழகரசுக்கு மனு தந்துயிருந்தார். அதிமுக அரசாங்கம் அதனை பரிசீலனை கூட செய்யாமல் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், அந்த வழக்கில் தானே வாதாட முடிவு செய்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதனை அவர்கள் பரிசீலனை செய்யவில்லை.
இந்நிலையில், தனது வழக்கில் தானே ஆஜராகி கருத்துக்களை எடுத்துவைக்க விரும்புகிறேன், அதற்காக என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை மற்றும் சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்மென நளினி சார்பில்ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நேற்றுஏப்ரல் 15ந்தேதி விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் , இதுகுறித்துதமிழகஅரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நீதிமன்றத்தில் அதிமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் தானே வாதாட சிறையில் பல சட்ட புத்தகங்களை படித்துள்ள நளினி அதற்காக பல குறிப்புகளையும் எடுத்து வைத்துள்ளார். தனது கணவரிடமும் ஆலோசனை பெற்றுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.