Court extends custody to Senthil Balaji

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். சக்தி வாய்ந்த நபராக செந்தில் பாலாஜி இருப்பதாகவும், தற்பொழுது வரை அவர் அமைச்சராக இருப்பதாகவும் இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்படும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்திருந்த நிலையில் நீதிபதி அல்லி மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செந்தில்பாலாஜிக்கான நீதிமன்ற காவல் 14 நாட்கள் அக்.13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment