Court extends custody to Ankit Tiwari

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

Advertisment

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

Advertisment

இந்நிலையில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே நீதிமன்றம் விடுத்திருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்றிலிருந்து மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அங்கித் திவாரியை வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஜனவரி 24ஆம் தேதி வரை அங்கித் திவாரிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.